Nava Tirupathi Temple Visit

Nammazhwar Sannadhi, Alwarthirunagari.
Nammazhwar Sannadhi, Alwarthirunagari.

வைணவத் திருப்பதிகள் 108 ஸ்தலங்களில், பாண்டிய நாட்டுத் திருப்பதிகள் 17 ஸ்தலங்கள் உள்ளன. இவற்றில் நம்மாழ்வாரால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட ஒன்பது ஸ்தலங்கள் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளன. பாண்டிய நாட்டில் பெரியாழ்வார், அவரது திருமகளான ஆண்டாள், ஸ்வாமி நம்மாழ்வார், மதுரகவியாழ்வார் ஆகிய நான்கு ஆழ்வார்கள் அவதரித்துள்ளனர். திருக்குறுங்குடியில் எழுந்தருளிருக்கும் பெருமாள் ஸ்ரீ சுந்தர பரிபூரண வடிவழகிய நம்பி ஆழ்வார்திருநகரியில் ஸ்வாமி நம்மாழ்வார் ஆக அவதரித்ததாக ஐதீகம். ஆகவே இந்த ஸ்தலங்களை திருக்குறுங்குடியை மையமாக வைத்து எவ்வாறு நவதிருப்பதி திருக்கோவில்களை ஸேவிக்கலாம் என்பதை பற்றி முழுமையாக பார்க்கலாம்.

Since Thirukurungudi is located between Tirunelveli and Kanyakumari, it is an ideal place to stay and we can cover around dharshan of 11 Divya Desams in a single day, including Nava Tirupati, Nanguneri Vanamamalai Perumal Temple, and Svakshetram Thirukurungudi Sri Sundara Vadivazhagiya Nambi Temple.

Highlights:

  • Nava Tirupathi is the part of Thirukkurungudi Centric Tourism
  • Detour from the city spaces and feel the calmness of a rural experience in Thirukkurungudi
  • Itinerary, taxi, food (Authentic Brahmin Food) and accommodation can be arranged with just one phone call.
  • Nava Kailayam can also be included as part of Itinerary
  • Dedicated temple guide service

Want to plan your NavaTirupathi Visit?

We’re here to plan your trip.

நவதிருப்பதி திருக்கோவில்கள்(Nava Thirupathi Temples)

கிரக தோஷ நிவர்த்தி

இந்த ஒன்பது ஸ்தலங்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு கோள்களுக்கு உகந்தவை. ஸ்ரீவைகுண்டம் – சூரியன், நத்தம் – சந்திரன், திருக்கோளூர் – செவ்வாய், திருப்புளியங்குடி – புதன், ஆல்வார்த்திருநகரி – குரு,தென் திருப்பேரை – சுக்கிரன், பெருங்குளம் – சனி, இரட்டைத் திருப்பதியில் தேவபிரான் – ராகு , அரவிந்த லோச்சனார் – கேது பரிகார நிவர்த்திக்கு உகந்தவை. அவரவர்க்கு உள்ள கிரக தோஷங்கள் நீங்க நவதிருப்பதி வந்து வழிபட்டால் அவை நீங்கும் என்பது நம்பிக்கை.

கலைநயம்

இக்கோவில்கள் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. பிற்காலத்தில் நாயக்க மன்னர்கள் இவற்றை அழகுபடுத்தினர்.

இக்கோவில்கள் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. பிற்காலத்தில் நாயக்க மன்னர்கள் இவற்றை அழகுபடுத்தினர்.

நாயக்க மன்னர்களே இக்கோயில்களில் உள்ள சிற்பச் செறிவுக்கும், புராதன மூலிகை ஓவியங்களும் காரணம். ஸ்ரீவைகுண்டம் கோவில்களில் ராஜ கோபுரம், திருவேங்கடமுடையான் ஸந்நிதி மண்டபம்,ஆகியவற்றில் காலத்தால் அழியாத கண்கவர் சிற்பங்கள் மிகுந்துள்ளது.இக்கோயில்களில் பிரகார சுவர்கள் முழுவதும் வரையப்பட்டுள்ள மூலிகை ஓவியங்கள் வரலாற்று பொக்கிஷங்கள்.

ஆழ்வார் திருநகரி, திருக்கோளூர், தென் திருப்பேரை போன்ற கோவில்களும் கலைநயம் மிக்கவை. இக்கோயில்களில் உள்ள பிரம்மாண்ட தேர்களும், வாஹனங்களும், கண்கொள்ளா அழகு மிக்கவை.

1. ஸ்ரீவைகுண்டம் – ஸ்ரீ வைகுண்டநாதர் பெருமாள் திருக்கோவில் (Srivaikuntanatha Perumal temple, SriVaikuntam)

Srivaikuntam temple gopuram view

இத்திருக்கோவில் திருநெல்வேலி – திருச்செந்தூர் (tirunelvei to tiruchendur) சாலையில் திருவைகுண்டத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

உற்சவர் கள்ளபிரான், ஸ்ரீ சோரநாதர்

மூலவர் திருநாமம் ஸ்ரீவைகுண்டநாதன்

தாயார் வைகுண்டவல்லி, சோரநாயகி

இத்திருக்கோவில் திருநெல்வேலி – திருச்செந்தூர் (tirunelvei to tiruchendur) சாலையில் திருவைகுண்டத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

  • மூலவர் திருநாமம் ஸ்ரீவைகுண்டநாதன்
  • தாயார் வைகுண்டவல்லி, சோரநாயகி
  • உற்சவர் கள்ளபிரான், ஸ்ரீ சோரநாதர்

காலதூஷகன் என்ற திருடன் பெருமாளின் பக்தனாக இருந்தான். அவன் திருடிய பொருட்களை கோவிலின் சேவைக்கும், தானங்கள் அளித்தும் செலவிட்டான். மணப்படை என்ற ஊரிலுள்ள அரண்மனையில் உள்ள பொருள்களைத் திருட சென்றான். அவனுடன் திருடச் சென்றவர்கள் சிக்கிக் கொள்ள அவன் மட்டும் தப்பி விட்டான். அவனை தேடி அரண்மனைக் காவலர்கள் வந்தனர். அப்போது இந்த தலத்தில் உள்ள பெருமாள் திருடன் வடிவில் அரண்மனைக்குச் சென்று மன்னன் முன்பாக நின்றார்.

பெருமாள் மன்னனிடம் “அரசே! நான் திருடியதாகக் குற்றம் சாட்டுகிறீர்கள். எதற்காக நான் திருடினேன் தெரியுமா? எனக்கு பணம் பற்றாக்குறையாக இருக்கிறது என்றால், இந்த நாட்டின் மன்னன் ஆட்சி நன்றாக இல்லை என்றுதானே பொருள்? என்னிடம் பொருள் இல்லாததால்தானே திருடினேன்? இதற்க்கு என்னைக் குற்றம் சொல்லி என்ன பயன்?”என்றார்.

மன்னன் முதலில் திடுக்கிட்டாலும், ஒரு சாதாரண திருடனால் இவ்வாறு பேச முடியாது என்பதை புரிந்துகொண்டு,வந்திருப்பது யார் என்று கேட்க, பெருமாள் தன் சுயரூபத்தை காட்டி அருளினார். திருடனாய் வந்து மன்னனின் மனதை மாற்றியதால் அவருக்குக் கள்ளபிரான் (Kallapiraan) என்ற பெயர் ஏற்பட்டது.

உற்சவங்கள்:

தை மாதம் முதல் நாள் கள்ளபிரானுக்கு 108 போர்வைகள் அணிவித்து பூஜை செய்கின்றனர். பிறகு கோவில் கொடிமரத்தை பெருமாள் சுற்றி வந்தபின் ஒவ்வொரு போர்வையாக எடுத்து பெருமாளின் அலங்காரத்தைக் கலைப்பார்கள். அதாவது 108 திவ்யதேசங்களில் உள்ள அனைத்து பெருமாள்களும் இந்நாளில் கள்ளபிரான் வடிவில் காட்சி தருவதாக ஐதீகம்.

Beautiful carved sculptures in hindu temple, tamilnadu

வைகுண்ட ஏகாதசியன்று, உற்சவரான கள்ளபிரான் அர்த்த மண்டபத்திற்குள் எழுந்தருளச்செய்து உடனே சந்நிதியை அடைத்து விடுவார்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் நடையைத் திறந்து, ஸ்வாமிக்கு தீபாராதனை காட்டியவுடன் மறுபடியும் சந்நிதியை அடைத்து விடுவார்கள். சில மணித்துளிகளே நடக்கும் இந்த வைபவம் மிகச் சிறப்பானதாகும்.

சித்திரை மாதம் உத்ஸவத்தின் போது நம்மாழ்வார்(Nammazhwar) ஆழ்வார் திருநகரியில் இருந்து இங்கு எழுந்தருளி ஸ்வாமியை மங்களாசாஸனம் செய்தபின் அன்ன வாஹனத்தில் எழுந்தருளுவார். அச்சமயத்தில் கள்ளபிரான், பொலிந்து நின்ற பிரான், வரகுணமங்கை வெற்றிக்கை பெருமாள், திருப்புளியன்குடி காய்ச்சினவேந்தப் பெருமாள் ஆகிய நான்கு பெருமாள்களும் கருட ஸேவை சாதிக்கின்றனர்.

இத்தலத்து பெருமாள் மீது நம்மாழ்வார், மணவாள மாமுனிகள் மங்களாசாஸனம் செய்திருக்கிறார்கள்.

Temple Timings in Srivaikuntam Srivaikuntanathan Perumal Temple:

Morning 7 AM to 12 PM (காலை 7.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை)
Evening 4.30 PM to 7.30 PM (மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை)

2. ஸ்ரீ ஆழ்வார் திருநகரி – ஸ்ரீ ஆதிநாத பெருமாள் திருக்கோவில் (Arulmigu Sri Aathinatha Aazhwar Thirukovil, Azhwar Thirunagari)

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரானை தரிசனம் செய்தபின் அங்கிருந்து கிளம்பி ஆழ்வார் திருநகரி திருக்கோவிலுக்கு சென்று அங்கு வீற்றிருக்கும் ஸ்ரீ ஆதிநாத பெருமாளை தரிசனம் செய்யலாம். இங்கு மூலவர் ஆதிநாதப் பெருமாள்.

  • உற்சவர் பொலிந்து நின்றபிரான்
  • தாயார் ஆதிநாதவல்லி,குருகூர்வல்லி

இது நம்மாழ்வார் அவதரித்த தலம். ஆதியிலே தோன்றிய நாதன் என்பதால் பெருமாள் ஆதிநாதன் என பெயர் பெற்றார். மேலும் சுயம்புவாக தோன்றிய மூலவரின் பாதங்கள் பூமிக்குள் இருப்பதாக ஐதீகம்.

இந்திரன் தன் பெற்றோர்களை உபசரிக்காமல் சாபம் பெற்று, அதிலிருந்து விடுபட இத்தலத்து பெருமாளை வழிபட்டான்.
தாந்தன் என்ற தாழ்த்தப்பட்டவனுக்கு பகவான் மோக்ஷம் கொடுத்தத்தால் தாந்த க்ஷேத்திரம் என்னும் பெயர் உண்டு.

காரியர் உடைய நம்பிக்கு மகனாகப் பிறந்த சடகோபன், பிறந்ததிலிருந்து அழாமல், கண் விழிக்காமல், உணவு உண்ணாமல் இருந்ததால் பெற்றோர்கள் குழந்தையை திருநகரிக்கு கொண்டு வந்தனர். குழந்தை இத்தலத்தை அடைந்ததும், தவழ்ந்து கோவில் பிரகாரத்தில் உள்ள புளியமரப் பொந்தில் அமர்ந்து 16 வருடம் த்யானத்தில் இருந்தார். யாத்திரை சென்றிருந்த மதுரகவியாழ்வார் இச்செய்தி கேட்டு நேரில் வந்து இவர் மகாஞானி என்று கூறி நம்மாழ்வார் என்று அக்குழந்தைக்கு பெயர் சூட்டினார். அதன் பின் நம்மாழ்வார் பாட,பேச ஆரம்பித்தார்.

இங்கு நம்மாழ்வார் உபதேசிக்கும் பாவனையில் ஞானமுத்திரையுடன் எழுந்தருளியிருக்கிறார்.

இங்கு உள்ள புளியமரம் 5500 வருடம் பழமையானது

History of a tamarind tree which do not close it compound leaves in nights
Nammazhwar performed thapa in this sthala vruksham for 16years, Alwar Thirunagari.

ஸ்ரீ ராமானுஜர், நம்மாழ்வார், மணவாள மாமுனிகள் இத்தலத்து பெருமாள் மீது மங்களாஸாஸனம் செய்துள்ளனர்.

Temple Timings in Azhwar Thirunagari Perumal Temple:

Morning 7 AM to 12.30 PM (காலை 7.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரை)
Evening 4.30 PM to 8.30 PM (மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை)

3. ஸ்ரீ திருக்கோளூர் – வைத்தமாநிதி பெருமாள் திருக்கோவில் (Sri Vaithamanidhi Perumal Temple, Thirukolur)

இத்திருக்கோவில் ஆழ்வார் திருநகரியில் இருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

  • மூலவர் வைத்தமாநிதி பெருமாள்
  • உற்சவர் நிஷேபவித்தன்
  • தாயார் குமுதவல்லி, கோளூர்வல்லி

மூலவர் வைத்தமாநிதி பெருமாள் ஆதிசேஷன் மீது பள்ளிகொண்டு மரத்தாலான நெல் அளக்க பயன்படும் மரக்காலை, தலைக்கு வைத்து படுத்திருப்பது சிறப்பு. இழந்த செல்வங்களை மீண்டும் திரும்ப பெறுவதற்கு, பக்தர்கள் இத்தலத்து பெருமாளை வழிபடுகின்றனர்.

ஒருமுறை குபேரன், பார்வதி தேவியின் அழகில் மயங்கி, அவரையே உற்றுப் பார்த்தார். இதனை கவனித்த தேவி, குபேரனிடம் இருந்த நவநிதிகள் விலகும்படி சாபமிட்டார். இதனால் வருத்தமடைந்த குபேரன் சிவபெருமானிடம் கூற, சிவபெருமான் திருமாலிடம் சரணடையுமாறு கூறினார்.

குபேரனிடமிருந்து விலகிய நவநிதிகள் அனைத்தும் இத்தலத்து பெருமாளிடம் வந்து அடைந்துவிட்டன. பெருமாள் இந்த நிதிகளைப் பாதுகாத்து வைத்திருந்ததால் ‘வைத்தமாநிதி பெருமாள்‘ என அழைக்கப்படுகிறார்.

பெருமாள் தனது தோலுக்கு கீழே நவநிதிகளை பாதுகாத்து வருவதை இன்றும் காண முடிகிறது. குபேரன் இத்தலத்து பெருமாளை வழிபட்டு இழந்த செல்வத்தை மீண்டும் பெற்றான்.

மதுரகவியாழ்வார் அவதார ஸ்தலம். இத்தலத்திற்கு “அதர்ம பிசுனம்”என்ற பெயரும் உண்டு.

இத்தலத்தில் நம்மாழ்வார் மங்களாசாஸனம் செய்திருக்கிறார்.

Temple Timings in Thirukolur Vaithamanidhi Perumal Temple

Morning 7.30 AM to 12 PM (காலை 7.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை)
Evening 4.30 PM to 7.30 PM (மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை)

4. தென் திருப்பேரை – மகரநெடுங்குழைக்காதர் பெருமாள் திருக்கோவில் (Sri Makara Nedunkulaikathar Temple, Thenthirupperai)

இத்திருக்கோவில் திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் திருக்கோவிலில் இருந்து 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

  • மூலவர் மகரநெடுங்குழைக்காதர்
  • உற்சவர் நீர்முகில்வண்ணன்
  • தாயார் குழைக்காதவல்லி, திருப்பேரை நாச்சியார்

பெருமாள் பூமாதேவியுடன் மிகவும் சந்தோஷமாக இருப்பதைக் கண்டு,லட்சுமிதேவி மனம் வருந்தினாள். மேலும் தனது குறையை துர்வாச முனிவரிடம் முறையிட, லக்ஷ்மிதேவிக்கு உதவ நினைத்த துர்வாச முனிவர் பெருமாளிடம் முறையிட்டார். அங்கிருந்த பூமாதேவி துர்வாசரை மதிக்கவில்லை. கோபங்கொண்ட துர்வாச முனிவர் பூமாதேவியை பார்த்து, அவளும் லக்ஷ்மிதேவியை போல் துக்கமாக இருப்பார் என சபிக்க, திகைத்து போன பூமாதேவி தன் சாபம் எப்பொழுது நீங்கும் என முனிவரிடம் கேட்டார்.

துர்வாச முனிவர் அதற்கு பங்குனி உத்திரத்தின் போது தாமிரபரணியில் நீராடி கொண்டிருக்கும் சமயம், இரண்டு மீன்வடிவ பொற்குண்டலங்கள் கிடைக்கும். அதனை திருமாலுக்கு சாற்றியவுடன் சாபம் நீங்கும் என கூறினார். பூமாதேவியும் முனிவர் கூறியபடி, தாமிரபரணியில் நீராடி, பெருமாளை நினைத்து தவமிருந்து, பங்குனி உத்திரத்தன்று, இரண்டு மீன் வடிவ பொற்குண்டலங்கள் கிடைத்தது. உடனே பூமாதேவி அதனை பெருமாளுக்கு அணிவித்து சாபத்தையும் போக்கிக்கொண்டார்.

பஞ்சத்தில் வாடிய விதர்ப தேசத்து அரசன், இத்தலத்து பெருமாளையும் வருணனையும் வணங்கி, பிரார்த்தனை செய்து அதன் பலனாக விதிர்ப்ப தேசத்து பஞ்சத்தையும், பட்டினியையும் போக்கினான்.இதனால் இங்குள்ள பெருமாளுக்கு “நீர்முகில் வண்ணன்” என்று பெயர்.

நம்மாழ்வார்,மணவாள மாமுனிகள் இத்தலத்து பெருமாள் மீது மங்களாசாஸனம் செய்திருக்கிறார்கள்.

Temple Timings in Thenthirupperai Perumal Temple

Morning 7 AM to 12 PM (காலை 7.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை)
Evening 5 PM to 8 PM (மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை)

5. பெருங்குளம் – மாயக்கூத்தர் திருக்கோவில் (Thirukuzhandhai Perumal Temple, Perungulam)

இத்திருக்கோவில் தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் திருக்கோவிலில் இருந்து 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

  • மூலவர் ஸ்ரீனிவாசன்
  • உற்சவர் மாயக்கூத்தன்
  • தாயார் அலமேலு மங்கைத் தாயார், குழந்தைவல்லி

அச்மஸாரன் என்னும் அரசன், நாட்டியமாடியபடி பலபேரை கொன்றான். யாராலும் அவனை ஒன்றும் செய்யா இயலவில்லை. பக்தர்களின் கஷ்டத்தை கண்ட பெருமாள், அச்மஸாரனை அழிக்க, அவனை கீழே வீழ்த்தி,மாயா யுத்தம் செய்து கொன்றார். இதனால் இங்குள்ள பெருமாளுக்கு மாயக்கூத்தன்(Mayakoothan) என்று பெயர்.

கமலாவதி என்ற பெண், வேதாசரன் என்பவரின் மகள். பெருமாளைக் குறித்து பாலிகை என்ற வனத்தில், தவம் செய்து அந்த இடத்திலேயே பெருமாளைத் திருமணம் செய்து கொண்டார்.

இத்தலத்தில் கருடன், உற்சவருக்கு பக்கத்தில் எழுந்தருளி இருக்கிறார்.

நம்மாழ்வார் இத்தலத்து பெருமாள் மீது மங்களாசாஸனம் செய்திருக்கிறார்.

Temple Timings in Divya Desam Arulmigu Sri Mayakoothar Temple

Morning 8 AM to 12 PM (காலை 8.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை)
Evening 6 PM to 8 PM (மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை)

6. தொலைவில்லிமங்கலம் – ஸ்ரீ ஸ்ரீனிவாசப்பெருமாள் திருக்கோவில் (Sri Srinivasa Perumal Temple, Tholaivillimangalam)

  • மூலவர் ஸ்ரீனிவாசன்
  • உற்சவர் தேவபிரான்
  • தாயார்அலமேலுமங்கை தாயார், பத்மாவதி தாயார்

யாகம் செய்வதற்காக பூமியை தோண்டியபோது, ஆத்ரேயசுப்ரபர் என்னும் ரிஷிக்கு ஒரு தராசும்(துலாம்), வில்லும் கிடைத்தது. அவைகள் உடனே சாப விமோக்ஷ்ணம் பெற்று ஆண்,பெண்ணாக உருப்பெற்றது. குபேரனை மதியாததால் சாபம் பெற்றதாகவும் கூறினார். பின்பு சாப விமோக்ஷ்ணம் பெற்று விடை பெற்றனர்.

இவ்வாறு தராசும்,வில்லும் மங்களம் பெற்ற இடம் “துலாம் வில்” மங்கலம் என்று அழைக்கப்பட்டு, நாளடைவில் தொலைவில்லிமங்கலம் ஆயிற்று.

இரட்டைத் திருப்பதிகளில் இது முதல் திருப்பதியாகும்.

இத்தலத்து பெருமாள் இந்திரன்,வாயு,வருணன் போன்றோருக்கு காட்சியளித்துள்ளார்.

நம்மாழ்வார் இத்தலத்து பெருமாள் மீது மங்களாசாஸனம் செய்திருக்கிறார்.

Temple Timings in Divya Desam Arulmigu Sri Mayakoothar Temple

Morning 8 AM to 1 PM (காலை 8.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை)
Evening 2 PM to 6 PM (மாலை 2 மணி முதல் இரவு 6 மணி வரை)

7. இரட்டைத் திருப்பதி – அரவிந்தலோச்சனர் திருக்கோவில் (Sri Aravindha Lochna Perumal Temple, Tirutholaivillimangalam)

  • மூலவர் அரவிந்தலோச்சனர்
  • உற்சவர் செந்தாமரைக்கண்ணன்
  • தாயார் கருந்தடங்கண்ணியார்

இரட்டைத் திருப்பதி கோவில்களில் இது இரண்டாவது திருக்கோவிலாகும்.

சாத்தியசீலரின் மகனான விபீதகனுக்கு குஷ்டம் வந்து,நாரத முனிவரின் ஆலோசனைப்படி,இங்குள்ள வருண தீர்த்தத்தில் நீராடி நோய் நீங்கப்பெற்றான்.

யாகத்தின் புண்ணியம் தேவர்களுக்கு மட்டுமின்றி தனக்கும் பங்கு வேண்டும் என்று அஸ்வினி தேவன், பிரம்மாவிடம் முறையிட பிரம்மாவும் தாமிரபரணி நதிக்கரையில் கோவில் கொண்டுள்ள அரவிந்தலோச்சனப் பெருமாளை வழிபட்டால், யாகத்தின் புண்ணியம் கிட்டும் என்று கூற, அஸ்வினி தேவனும் அவ்வாறே செய்ய, யாகத்தின் புண்ணியமும் கிடைத்தது.

பெருமாளுக்கு நன்றி செலுத்தும் வகையில் செந்தாமரையைக் கொண்டு, அஸ்வினி தேவன் பூஜித்தான். அதனால் இத்தலத்து பெருமாளுக்கு “செந்தாமரைக் கண்ணன்” என்ற பெயர் வந்தது.

நம்மாழ்வார் இத்தலத்து பெருமாள் மீது மங்களாசாஸனம் செய்திருக்கிறார்.

Temple Timings in Sri Aravindha Lochna Perumal Temple, Tholaivillimangalam

Morning 8 AM to 1 PM (காலை 8.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை)
Evening 2 PM to 6 PM (மாலை 2 மணி முதல் இரவு 6 மணி வரை)

8. திருப்புளியங்குடி – ஸ்ரீ பூமிபாலகர் திருக்கோவில் (Bhoomipalar Perumal Temple, Thirupuliyangudi)

  • மூலவர் பூமிபாலகப் பெருமாள்
  • உற்சவர் காய்ச்சினவேந்தர்
  • தாயார் மலர்மகள் நாச்சியார், பூமகள் நாச்சியார்

இத்தலத்து பெருமாளின் திருவடியிலிருந்து தாமரைக்கொடி ஒன்று தனியாகச் சென்று சுவரில் உள்ள ப்ரம்மாவின் தாமரை மலருடன் இணைந்திருக்கிறது. பெருமாளின் பாத தரிசனத்திற்கு, வெளிப் பிரகாரத்தில் உள்ள ஜன்னல் வழியாகவே பார்க்க வேண்டும்.

இந்திரனுடைய ப்ரம்மஹத்தி தோஷத்தை நீக்கிய தலம் ஆகும்.

வசிஷ்டரின் மகனான சக்தி முனிவரை, யக்யசர்மா(yagnya sharma) என்பவர் அவமதித்ததால், சக்தி முனிவர் அவரை அரக்கனாக மாறும்படி சாபமிட்டு, அதற்கு சாப விமோக்ஷ்ணம் வழங்கினார். அதாவது இந்திரன் நடத்தும் யாகத்திற்கு கொடுக்க முற்படுவாய். அப்பொழுது திருமால் தன்னுடைய கதையினால் உனக்கு சாப விமோக்ஷணம் தருவார் என்றார் சக்தி முனிவர்.

ஸ்ரீமந் நாராயணன் ஒருமுறை திருமகளோடு தனித்து உலா வருவதை கண்ட பூமி தேவி கோபம் கொண்டு பாதாள உலகத்திற்கு சென்றாள். உடனே திருமாலும் ஸ்ரீ தேவியும் சென்று சமாதானப்படுத்தி அழைத்து வந்தனர். பாதாள லோகம் சென்ற களைப்பு தீர பெருமாள், ஆதிசேஷன் பாய் விரித்திருக்க, பன்னிரண்டு அடியில் சயனித்த திருக்கோலத்தில் இருக்க பாதங்களின் அருகில் தேவியர் இருவரும் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகின்றனர்.

பூமிதேவிக்கு அருளியதால் பூமிபாலன க்ஷேத்திரம் என்னும் பெயர் வந்தது.

நம்மாழ்வார் இத்தலத்து பெருமாள் மீது மங்களாசாஸனம் செய்திருக்கிறார்.

Temple Timings in Sri Thirupuliyangudi Kaaisinavendhar Perumal Temple

Morning 8 AM to 1 PM (காலை 8.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை)
Evening 2 PM to 6 PM (மாலை 2 மணி முதல் இரவு 6 மணி வரை)

9. நத்தம் – ஸ்ரீ விஜயாஸன பெருமாள் திருக்கோவில் (Sri Vijayasana Perumal Temple, Natham)

  • மூலவர் ஸ்ரீ விஜயாஸன பெருமாள்
  • உற்சவர் எம்மடர்க்கடிவார்
  • தாயார் வரகுணவல்லி தாயார்,வரகுணமங்கை தாயார்

“வேதவித்” என்னும் பக்தன் பெருமாளை தரிசனம் செய்வதற்காக கடுமையாக தவம் இருந்தான். பகவானும் வேதவித்தின் கோரிக்கையை ஏற்று தரிசனம் கொடுத்தார். இதனால் இவருக்கு விஜயாஸான பெருமாள் என பெயர் வந்தது.

அக்னி பகவான், ரோமச முனிவர், சத்தியவான் ஆகியோருக்கு பெருமாள் நேரடியாக தரிசனம் கொடுத்த இடம்

நம்மாழ்வார் இத்தலத்து பெருமாள் மீது மங்களாசாஸனம் செய்திருக்கிறார்.

Temple Timings in Sri Thiruvaragunamangai Perumal Temple

Morning 8 AM to 1 PM (காலை 8.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை)
Evening 2 PM to 6 PM (மாலை 2 மணி முதல் இரவு 6 மணி வரை)